“தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை (24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக, நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது உலகம் எம்மை அங்கீகரிக்கும். அந்த நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.