Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைதாயை படுகொலை செய்த மகன்

தாயை படுகொலை செய்த மகன்

தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான 67 வயதான எஸ்.செல்லம்மா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.  அந்த தாயின்  41 வயதுடைய   மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது தாயை பலமாக தாக்கியதில் அவரது தலை பகுதியில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியதில் கடும் காயமடைந்த தந்தை, தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி தனது மனைவியை தாக்கியதில் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு  தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தாயுடன் வசித்து வந்த சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி அன்று தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  தான் 16 வயதிலேயே கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தன்னை பற்றி எவரும் கவலைப்படவில்லை எனவும் கூறி தாயை தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் தனிப்பட்ட வேலை ஒன்றிற்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று மதியம் 4 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வீட்டிற்குள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.  பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் இருந்து  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments