வன விலங்கை வேட்டையாடும் நோக்கில் மகன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தை உயிரிழந்துள்ள துயர சம்பவம் கேகாலை தெடிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 47 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மலைப் பகுதிக்கு தந்தையும் மகனும் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். இதன்போது மகனால் வன விலங்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவரது 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.