ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பல முறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தினர். இதன்போதே ஒருவர் காயமடைந்தார்.