இரண்டு பணிப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் வீட்டுப் பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த பணியகத்தின் அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உதவி நிர்வாகி உட்பட இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.