VAT வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுக்கள் அவ்வாறு செய்யாமல் பொருத்தமான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணம் அத்தியாவசிய கொடுப்பனவுகள் மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.