நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டவர் இருவர் உயிரிழந்துள்ளனர். மிதிகமவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலி – மாத்தறை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகள் சென்ற ஸ்கூட்டர் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சுற்றுலா பயணிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.