யாழ்ப்பாணத்தில் குழந்தை ஒன்று பிறந்து 2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதகல் மேற்கை சேர்ந்த ‘அருள் டிசாந்தன் கொலஸ்ரிகா‘ என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாய், வயிற்றோட்டம் காரணமாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 2 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியசாலையில்,சிகிச்சை பெற்றுவந்த தாயும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.