பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் ‘பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த நடிகை பூனம் பாண்டே, தனது 32 வயதில் உயிரிழந்தார். அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.