கிளிநொச்சியில், யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை வீதியில் பொலிஸார் இழுத்துச் சென்றனர்.
வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல், கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் சட்டங்களை இயற்றுதல், தீர்வு கிடைக்காமை, தற்போது மக்களுக்கு தாங்க முடியாத பிரச்சனைகள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர், எஸ்.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலரும் இந்த கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.