யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ எனப்படும் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் இவ்வாறு கல்கிஸ்ஸை பகுதியில் தங்கியிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ள நிலையில், கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.