சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று (04) முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராடத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடைகளை அமைத்திருந்ததுடன், அதனை மீறி செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.