யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (07) சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது.
சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்றமையால் , சாரதி வாகனத்தை நிறுத்த வில்லை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிப்பர் வாகன சாரதி , உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.