விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.