நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக மீனவர்கள் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.