குற்றக் கும்பலை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்டத்தை அமுல்படுத்த தயங்கப் போவதில்லை என அவர் கூறினார்.
குற்றக் கும்பலின் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவிற்கு ஆதரவாக செயற்பட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.