தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5 இருந்து 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தினை செலுத்துகிறார்கள் என்று புதிய பகுப்பாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் முதல் தர பொருளியல் நுண்ணறிவு தளமாகிய வெரிட்டே நிறுவனத்தின் publicfinance.lk வெளியிட்ட பகுப்பாய்வு அறிக்கையின்படி தற்பொழுது தெற்காசியாவில் அதிஉயர் மின்சார கட்டணம் இலங்கையிலேயே உள்ளது. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5 இருந்து 3 மடங்கு அதிகமாக தமது மின்சார கட்டணங்களை செலுத்துகிறார்கள்.