இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
கடந்த 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான பாடத்திட்டங்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.