Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கைபெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறைத் தண்டனை

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறைத் தண்டனை

திருமணமாகாத 35 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை குற்றவாளியாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்றம் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது,

குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனையுடன், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 இலட்சம் ரூபாய் அபராதத் தொகை வழங்க வேண்டும் என்றும் நுவரெலியா மேல் நீதிமன்றம்  இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் 35 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரை  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். தான் கடமையில் இருந்தவேளையிலேயே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர்  நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments