கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (12) பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி மூழ்கினர்.
மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.