ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில் இருந்து, கம்பளை , ஜயமாலபுர பகுதிக்கு போதை மாத்திரைகளை எடுத்துவந்த வேளையிலேயே, ஏத்கால பொலிஸ் குழுவினரால் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, வைத்தியருக்குரிய வைத்திய அடையாள சின்னத்துடன் அவர் பயணித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என தெரிவித்த கம்பளை ஏத்கால பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.