யாழ்ப்பாணத்தில் இடமபெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் உயிரிந்துள்ளனர். யாழ்- இணுவில் பகுதியில் இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. வான் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தையான அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
மேலும், வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் ரயில் கடவை காப்பாளர் இல்லாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.