இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன். இவர் கடந்த 14-ந்தேதி தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேம்ஸ் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நபரை கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.