பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொஸ்கொட சுஜீ குறித்த குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது. எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.
சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.