கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
இத்திருவிழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதே வேளை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கச்சதீவு பயணமாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (23) 40 படகுகளில் 400 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றனர்.
மேலும், இந்த வருட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுிற்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.