அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத நிலையில் குவிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சுப்பொறிகள் கடந்த திங்கட்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாகவும், அதன்படி இந்த வாரத்தில் இருந்து அச்சிடும் நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.