உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சந்தையில், உணவுப்பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.