களவு, மோசடிகள் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் அப்போதைய அமைச்சரை பாதுகாக்க வேறு அமைச்சு வழங்கப்பட்ட போதும், திருட்டுக்களை வெளிக்கொணர்ந்த ரொஷான் ரணசிங்க வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து குறித்து சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ரிடோக்சினன் என்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசியில் இருந்தும் 11 கோடி ரூபா திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.