Thursday, September 19, 2024
Google search engine
Homeவிளையாட்டுவங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதன் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 339 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அஸ்வின் சதமடித்து (102 ரன்கள்) அசத்தினார். முன்னதாக இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட டிஎன்பிஎல் தொடரின்போது பேட்டிங்கில் வேலை செய்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அத்துடன் கடினமான நேரங்களில் ஜடேஜா தமக்கு உதவியதைப் பற்றி அவர் முதல் நாள் முடிவில் பேசியது பின்வருமாறு:-

“சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல். இந்த மைதானத்தில் நான் முழுமையாக விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது. சென்ற முறை இங்கே சதமடித்தபோது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். டிஎன்பிஎல் தொடரிலிருந்து வந்த நான் அங்கே கொஞ்சம் எனது பேட்டிங்கில் வேலை செய்தேன். இது போன்ற பிட்ச்சில் பந்தை நீங்கள் அடிக்க விரும்பினால் ரிஷப் பண்ட் போல அதிரடியாக விளையாட வேண்டும். பழைய சென்னை பிட்ச்சில் கொஞ்சம் வேகம் இருக்கும். செம்மண் பிட்ச் உங்களுடைய ஷாட்டுகளை விளையாட அனுமதிக்கும்.

ஜடேஜா எனக்கு உதவிகரமாக இருந்தார். நான் கொஞ்சம் சோர்வடைந்து வியர்வை சிந்தியதை கவனித்த அவர் என்னை வழிநடத்தினார். கடந்த சில வருடங்களில் ஜடேஜா எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். சிங்களை டபுள் டிரிபிளாக மாற்றுவதில் உதவிய அவர் தொடர்ந்து என்னை உத்வேகப்படுத்தினார். இந்த பிட்ச் போட்டியின் கடைசிப் பகுதியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறலாம்” என்று கூறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments