கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அண்மித்த ஐயன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளமையால், தாழ்நிலப் பகுதியிலுள்ள ஐயன்கோவில் கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐயன்கோவில் கிராமத்தை சேர்ந்த 23 குடும்பங்களின் 70 பேர் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.