யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடலில் மிதந்து வந்த 35 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த 35 கிலோகிராம் கஞ்சாவும் 16 பொதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.