வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.