டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (07) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் மாத்திரம் நாட்டில் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, புத்தளம் கம்பஹா, களுத்துறை, காலி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் டெங்கு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.