கடந்த 12 வருடங்களுக்குப் பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சேனநாயக்கா சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது.
இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்கின்றது. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.