கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.