அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சுமார் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) கல்விக்கடனை ரத்து செய்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்மூலம் 74 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது ஆசிரியர், நர்சுகள் என அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.