முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று (28) இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்தனர்.
இந் நிகழ்வின் போது முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். இதனை அவதானித்த முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தினர்.