கடந்த 16ஆம் திகதி முகத்துவாரம் லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இந்தக் கொலை முயற்சி குற்றம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்படி, இந்த குற்றச் செயலுக்கு உதவிய இரு சந்தேக நபர்கள் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 மற்றும் 21 வயதுடைய வயதுடைய சந்தேநகபர்கள் சேதவத்த பலு பாலத்திற்கு அருகில் மற்றும் பர்குயூஷன் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 4 கிராம் 451 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.