முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(01) கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள பூதவுடலை கொழும்பில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும் என சாந்தனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சாந்தனின் உடலை, சாந்தனின் உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளனர்.