Friday, October 4, 2024
Google search engine
Homeஇலங்கைசீஷெல்ஸ் தீவில் இலங்கை மீனவர்கள் 9 ஆவது நாளாக போராட்டம்

சீஷெல்ஸ் தீவில் இலங்கை மீனவர்கள் 9 ஆவது நாளாக போராட்டம்

ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் 9 ஆவது நாளாக தொடர்கிறது.

தங்களை நாட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி, இந்த மாதம் முதலாம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

லோரன்சோ புதா 4 என்ற மீன்பிடிப் படகில் கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த படகு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி டிக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சிலாபம் – மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 6 மீனவர்களே படகில் பயணித்திருந்தனர்.

இந்த நிலையில், மீனவர்கள் ஆயுதக் குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டனர். மீனவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments