சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் கயாடு லோஹர். இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு இணையத்தில் இவரது காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரானது.
இப்படத்தை தொடர்ந்து Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்,”இதயம் முரளி” படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கயாடு லோஹர் இதயம் முரளி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் வீடியோவை படக்குழு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளது.